சி.ஏ பவுண்டேசன் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் - எம்.பி சு.வெங்கடேசன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பொங்கல் பண்டிகை அன்று நடைபெற உள்ள சி.ஏ பவுண்டேசன் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

வரும் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் அன்று Business laws தேர்வும், ஜனவரி 16-ஆம் தேதி உழவர் திருநாள் அன்று Quantitative Aptitude தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அன்று நடைபெற உள்ள இத்தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மாணவர்களும், கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், பொங்கல், தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருதி, தேர்வு அட்டவணையை மாற்றியமைக்குமாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றம் ICAI தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார் அகர்வாலுக்கு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார். 



Night
Day