சூரியனின் காந்தப் புலத்தை ஆய்வு செய்யும் பணிகள் வெற்றிகரமாகத் தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சூரியனின் காந்தப் புலத்தை ஆய்வு செய்யும் பணிகளை ஆதித்யா எல்-1 விண்கலத்தில் உள்ள கருவிகள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள பதிவில், ஆதித்யாவில் சூரியனின் காந்தப்புலத்தை அறிவதற்காக பொருத்தப்பட்டிருந்த மேக்னடோ மீட்டா் தற்போது வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது. இந்தக் கருவி சூரியன் மற்றும் இதர கிரகங்களின் காந்தப்புலத்தை அளவிடும் என்றும் 132 நாள்களாக இயக்கப்படாமல் இருந்த மேக்னடோ மீட்டரின் ஆன்டனாக்கள் கடந்த 11-ம் தேதி முதல் இயக்க நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதிலுள்ள 2 சென்சார்களும் நல்ல நிலையில் ஆய்வைத் தொடா்வதாகவும் தெரிவித்துள்ளது.

Night
Day