செந்தில் பாலாஜி ஜாமீன் மனு - உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஓராண்டாக சிறையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது. அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜியை கடந்தாண்டு ஜுன் 14-ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்த நிலையில் இதுவரை அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்தநிலையில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் நேற்று முன்தினம்  விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை தள்ளி வைக்க அமலாக்கத் துறை தரப்பில் கோரப்பட்டது. அதனை ஏற்று விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Night
Day