சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் பல ஆண்டு சம்பிரதாயப்படி நேற்றிரவு முதல் இன்று இரவு வரை மூடப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியில் ஜார்ஜ் டவுன், பூக்கடை மற்றும் பாரிமுனைக்கு நடுவில் உயர்நீதிமன்றம் கட்டப்பட்டதால் இப்பகுதி மக்கள் அதனை சுற்றி செல்லும் நிலை உருவானது. நாளடைவில் உயர்நீதிமன்ற வளாகத்தை பாதையாக பயன்படுத்த தொடங்கினர். இதை கவனத்தில் கொண்ட நீதிமன்ற நிர்வாகம், மக்கள் வருங்காலங்களில் இப்பாதையை உரிமை கோரக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் வருடத்தில் ஒருநாள் மூடப்படும் என்று அறிவித்தது. இது ஆண்டுதோறும் நவம்பர் இறுதி வார சனிக் கிழமையில் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்றிரவு 8 மணி முதல் இன்றிரவு 8 மணி வரை சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டுள்ளன.


Night
Day