செப்.21-ஆம் தேதி டெல்லி முதல்வராக அதிஷி பதவியேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிஷி, வரும் 21ம் தேதி பதவியேற்க உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் அதிஷி, ஆட்சி அமைக்க துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவிடம் உரிமை கோரினார். இந்நிலையில், டெல்லி முதலமைச்சராக அதிஷியும், அவருடன் சேர்ந்து மற்ற அமைச்சர்களும் வரும் 21ம் தேதி பதவியேற்க உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித் ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சர் அதிஷி என்பது குறிப்பிடத்தக்கது.

varient
Night
Day