செய்தியாளர்களை விரட்டி விரட்டி தாக்கிய நடிகர் மோகன் பாபு

எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை நடிகர் மோகன்பாபு மற்றும் அவரது பாதுகாவலர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூத்த நடிகரும், அரசியல்வாதியுமான மோகன் பாபு, அவருடைய மகன் மஞ்ச் மனோஜ் இடையே சொத்து மற்றும் குடும்ப பிரச்சனை நிலவி வருகிறது. இது தொடர்பாக இருவரும் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில்,  சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள், செய்தி சேகரிக்க ஹைதரபாத்தில் உள்ள மோகன் பாபு வீட்டிற்கு செய்தியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது, மோகன் பாபுவும், அவருடைய பாதுகாவலர்களும் செய்தியாளர்களை விரட்டி, விரட்டி  கொடூரமாக தாக்கியுள்னர். மேலும் செய்தியாளர்கள் வைத்திருந்த மைக்கை பிடுங்கி, அதன் மூலமும் செய்தியாளர்களை மோகன் பாபு தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day