செல்ஃபி எடுத்தபோது ரயில் வந்ததால் பாலத்தில் இருந்து கீழே குதித்த தம்பதி!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தான் மாநிலத்தில் ரயில்வே பாலத்திலிருந்து 90 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தம்பதி குதிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலி மாவட்டத்தை சேர்ந்த ராகுல்மேவாடா, அவருடைய மனைவி ஜான்வி இருவரும் கோரம்காட்டில் உள்ள ரயில்வே பாலத்தில் நின்றுகொண்டு செல்பி எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாலத்தின் மீது ரயில் வந்ததால், செல்பி எடுத்துக்கொண்டிருந்த தம்பதி அப்பகுதியிலிருந்து விலகிசெல்ல வழியில்லாமல், 90 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் இருந்து குதித்தனர். இதில் பலத்த காயமடைந்த தம்பதி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Night
Day