செல்போன் உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்தது நிதி அமைச்சகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்துள்ளது. இந்த வரிக்குறைப்பு சலுகை, உலகளாவிய உற்பத்தியாளர்களுக்கு இந்தியாவில் பெரியளவிலான மொபைல் அசெம்பிளி லைன்களை அமைக்க உதவும் எனவும் இந்தியாவிலிருந்து செல்போன்கள் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Night
Day