ஜன.1ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் - புதுச்சேரி அரசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் வரும் ஜன.1ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 


புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிரப்பு கிளம்பியதை அடுத்து, கட்டாய ஹெல்மெட் திட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போக்குவரத்து காவல்துறை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் திரிபாதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மோட்டார் வாகன சட்டப்படி ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை வாகன ஓட்டிகள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.     

Night
Day