ஜம்முகாஷ்மீர் தாக்குதல் - திருமணமான 7 நாட்களில் கணவனை இழந்த மனைவி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் திருமணமான 7 நாட்களில் கணவனை இழந்த மனைவியின் மனதை உலுக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.


பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஹரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் என்பவரும் உயிரிழந்தார். 7 நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணமான நிலையில், தேனிலவு கொண்டாட காஷ்மீர் சென்றபோது மனைவி கண்முன்னே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கணவனை இழந்த மனைவி அவர் அருகே செய்வதறியாது அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது.

Night
Day