ஜம்மு, ஒடிசா, தெலங்கானா மாநிலங்களுக்கான புதிய ரயில்வே திட்ட பணிகள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு - காஷ்மீர், ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பல்வேறு முக்கிய ரயில்வே திட்ட பணிகளை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி இன்று துவக்கி வைத்தார்.

ஜம்மு காஷ்மீரில் புதிய ரயில்வே பிரிவின் கீழ் பத்தான்கோட் முதல் பாராமுல்லா வரை புதிய ரயில் திட்ட பணிகளையும் காணொளி மூலமாக துவக்கி வைத்தார். தெலங்கானா மாநிலத்தில் 413 கோடியில் சார்லபள்ளியில் புதிய ரயில் நிலைய முனையத்தையும் திறந்து வைத்த அவர், பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு புதிய வசதிகளும் இந்த முனையத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார். இதேபோல கிழக்கு கடற்கரை ரயில்வே சார்பாக ராயகாடா ரயில்வே பிரிவு கட்டடத்தின் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கிய மோடி, இதன்மூலமாக ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையே சமூக பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என குறிப்பிட்டார். 

Night
Day