ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற தீவரவாதிகள் சுட்டுக்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு - காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படையினர், அவர்களிடம் இருந்து ஏ கே 47 துப்பாக்கி உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றினர். அங்குள்ள நவ்ஷேராவின் லாம் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர், 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து 2 ஏகே 47 துப்பாக்கிகள், ஒரு பிஸ்டல் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

Night
Day