ஜம்மு காஷ்மீரில் 1 மணி நிலவரப்படி 41.17 சதவீத வாக்குகள் பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 41 புள்ளி 17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பா.ஜ.க. மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடும் நிலையில், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்நிலையில், முதற்கட்டமாக ஜம்மு பகுதியில் 8 தொகுதிகள் காஷ்மீரில் 16 தொகுதிகள் என 24 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. வாக்குச்சாவடிகளில் காலை முதலே திரளான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 

இதனிடையே, மதியம் 1 மணி நிலவரப்படி 41 புள்ளி 17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கிஸ்த்வார் தொகுதியில் 56 புள்ளி 86 சதவீதமும், குறைந்தபட்சமாக புல்வாமா தொகுதியில் 29 புள்ளி 84 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Night
Day