ஜம்மு-காஷ்மீரில் 48 சுற்றுலா தளங்கள் மூடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்‍குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக உளவுத்துறை தகவல் வெளியான நிலையில் அங்குள்ள 48 சுற்றுலாத்தலங்கள் பாதுகாப்பு காரணங்களுக்‍காக மூடப்பட்டன.

கடந்த 22 ஆம் தேதி பைசரன் பள்ளத்தாக்‍கில் சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்‍கியால் சுட்டுக்‍கொன்றனர். இந்நிலையில், அம்மாநில அரசு காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது. 
தூத்பத்ரி, யூஸ்மார்க், கௌசர்நாக், பங்கஸ் பள்ளத்தாக்கு, ராம்போரா, ராஜ்போரா உள்ளிட்ட 48 சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.  இங்குள்ள ஸ்லீப்பர் செல்கள் மூலம் மீண்டும் பாகிஸ்தான் தாக்‍குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக ​உளவுத்துறை எச்சரித்தது. தற்போது சுற்றுலாவுக்கு அனுமதியுள்ள 39 இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Night
Day