ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதற்காக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

புகழ்பெற்ற சுற்றுலா தளமான பஹல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலிச் செலுத்துவதற்காகவும், தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கவும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் தீவரவாதத் தாக்குதலைக் கண்டித்தும் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Night
Day