ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட பாஜகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரசியல் அமைப்பு சட்டம் 370 தொடர்பாக இன்றும் பா.ஜ.க எம்எல்ஏக்‍கள் அமளியில் ஈடுபட்டதால் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் இருந்து குண்டுக்‍கட்டாக வெளியேற்றப்பட்டனர். 

கடந்த 4 ஆம் தேதி ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்கிய நாளில் இருந்து, தொடர்ந்து தினமும் எம்எல்எஏக்‍கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளிக்கக் கோரும் தீர்மானம், கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து பாஜக எம்எல்ஏக்‍கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், சபாநாயகர் ரஹீம் ராதர், சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் நிறைவேற்றக்‍கோரும் தீர்மானத்துக்‍கு நன்றி தெரிவிக்‍கும் வகையில் பேச வருமாறு ஆளும் தேசிய மாநாட்டு கட்சி எம்எல்ஏ ஜாவித் பெய்க்ஐ அழைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜடி, பி.டி.பி, ஏ.ஐ.பி உள்ளிட்ட கட்சி எம்எல்ஏக்‍கள் குரல் எழுப்பினர். பதிலுக்‍கு ஆளும் கட்சி எம்எல்ஏக்‍கள் கூச்சலிட்டனர். சிறையில் உள்ள எம்.பி.யான இன்ஜினியர் ரஷீத்தின் சகோதரரான எம்எல்ஏ ஷேக்‍ குர்ஷித் தனது கோரிக்‍கைகளை வலியுறுத்தி குரல் எழுப்பியதையடுத்து அவரை பாதுகாவலர்கள் வெளியேற்றினர். 

varient
Night
Day