எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு-370 விவகாரத்தில் பெரும் அமளி ஏற்பட்டு எம்எல்ஏக்கள் இடையே தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பு நடந்ததால் பதற்றமான சூழல் நிலவியது.
ஜம்மு-காஷ்மீர் புதிய சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. அன்று மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் எனத் தீர்மானம் கொண்டு வந்தார். இது சபாநாயகரால் ஏற்கப்படவில்லை. இதையடுத்து இதே தீர்மானம் உமர் அப்துல்லா அரசால் நேற்று கொண்டு வரப்பட்டது. இந்த இரு நிகழ்வுகளிலும் பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், இன்று சட்டமன்றம் கூடியதும், சிறையில் உள்ள பாரமுல்லா மக்களவைத் தொகுதி எம்.பி. என்ஜினியர் ரஷீத்தின் சகோதரரும் லாங்கேட் தொகுதி அவாமி இத்தேஹாத் கட்சி எம்.எல்.ஏவுமான குர்ஷித் அகமது ஷேக், 370வது சட்டப்பிரிவு குறித்த பேனரைக் காட்டினார். இதையடுத்து அவையில் புயல் கிளம்பியது.