ஜம்மு காஷ்மீர் தேர்தல் - 3 மணி நிலவரப்படி 46 .12 % சதவீத வாக்குகள் பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 நிலவரப்படி 46 .12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. கடந்த 18ம் தேதி 24 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்த நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் ஜம்முவில் தலா 3 மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இத்தேர்தலில், முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் உள்பட 239 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

2ஆம் கட்ட தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 46.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

Night
Day