ஜம்மு காஷ்மீர் - உமர் அப்துல்லா தொடர்ந்து முன்னிலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மும்முனை போட்டி நிலவும் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 48 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அம்மாநிலத்தில் நட்சத்திர வேட்பாளர்களின் முன்னிலை விவரங்களை பார்க்கலாம்.

கந்தர்பால் மற்றும் பட்காம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா இரு தொகுதிகளிலும் அதிகளவிலான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

பிடிஐ கட்சி சார்பில் பிஜ்பெஹாரா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி பின்னடைவை சந்தித்துள்ளார்.

நவ்ஷேரா தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா பின்னடைவை சந்தித்துள்ளார்.

Night
Day