ஜம்மு-காஷ்மீர் 2-ம் கட்டத்தேர்தல் விறுவிறுப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை 2ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள், தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட 370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்னர் நடைபெறும் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவும், மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து போட்டியிடுகின்றன. காங்கிரசும் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்து களமிறங்கியுள்ளன. 

செப்டம்பர் 18ம் தேதி 24 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் ஜம்முவில் தலா 3 மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளில் நடைபெறவுள்ள 2ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது. 

இந்நிலையில், 2ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் உள்பட 239 வேட்பாளர்கள் களத்தில் உள்ள இந்த தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதற்காக 3 ஆயிரத்து 502 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பூத்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக பல இடங்களில் பாதுகாப்பு படையினர் விடியவிடிய வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 2ம் கட்ட தேர்தலில் சுமார் 25 லட்சம் வாக்காளர்கள் ஜனநாயக கடமையாற்ற தகுதி பெற்றுள்ளனர். 

Night
Day