ஜம்மு-காஷ்மீர்: கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு-காஷ்மீரின் குரேஸி பகுதியில் உள்ள சாலைகளில் படர்ந்துள்ள பனிக்கட்டிகளை பொதுமக்களே அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஜம்மு-காஷ்மீரில் வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு சென்றுவிட்டதால் அங்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பந்திபோரா மாவட்டம் குரேஸி பகுதியில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவால், அங்குள்ள பல்வேறு முக்கிய சாலைகள் உறைபனியால் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பனிப்பொழிவை தாங்க முடியாமல் பொதுமக்களே சாலைகளில் படர்ந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

Night
Day