ஜம்மு - காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு - காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பெகிபாக்-கில் உள்ள காதர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில், அந்த பகுதியை பாதுகாப்பு படையினரும், ஜம்மு-காஷ்மீர் போலீசாரும் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளும் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்த நிலையில், 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காயமடைந்த 2 ராணுவ வீரர்கள் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

Night
Day