ஜாமீன் வழங்கும் விவகாரத்தில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் - சந்திரசூட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜாமீன் விவகாரத்தில் பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும் என கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தியுள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், முக்கியத்துவம் வாய்ந்த குற்ற வழக்குகளில், சந்தேகம் ஏற்பட்டால், ஜாமீனை மறுத்து கீழமை நீதிமன்ற நீதிபதிகள் தாங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென விரும்புவதாக குறிப்பிட்டார்.
கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகுவதாக தலைமை நீதிபதி குறிப்பிட்டார். ஒவ்வொரு வழக்கின் நுணுக்கங்களையும் நீதிபதிகள் நன்கு ஆராய வேண்டும் என கேட்டுக்‍கொண்டார். தங்களிடம் வரும் மிகச்சிறிய வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், பெரும்பாலான வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

Night
Day