ஜியோ, ஏர்டெல் கட்டண உயர்வுக்கு மத்தியில் விலையை குறைத்த பிஎஸ்என்எல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் ரீசார்ஜ் விலையை உயர்த்திய நிலையில் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய ப்ளானை வெளியிட்டுள்ளது. தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளித்தன. ஆனால், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், 249 ரூபாய்க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டி, வரம்பற்ற அழைப்பு மற்றும் தாராளமான டேட்டா அலவன்ஸ் ஆகியவற்றுடன், அதிக மதிப்பு மற்றும் குறைந்த செலவை எதிர்பார்க்கும் பயனர்களை ஈர்க்கும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய திட்டத்தில், வரம்பற்ற இலவச அழைப்பு, மொத்தம் 90 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் உள்ளன. 

Night
Day