ஜூன் 1-ம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் வரும் 1ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் இதுவரை 486 தொகுதிகளுக்கு ஆறு கட்டங்களாக தேர்தல்கள் முடிவடைந்துள்ளது. கடைசி மற்றும் 7வது கட்ட தேர்தல் வரும்  57 தொகுதிகளில் நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. 

இந்நிலையில், கடைசி கட்ட தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் வரும் 1ம் தேதியன்று, 28 எதிர்க் கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலுக்குப் பிந்தைய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஜூன் 2ம் தேதி வரை இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் இந்த கூட்டத்தில் பங்கேற்வுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி, குஜராத், கோவா, அரியானா ஆகிய மாநிலங்களில் தொகுதி பங்கீடு செய்து போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள், பஞ்சாபில் மட்டும் தனித்தனியாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Night
Day