ஜூன் 24-ஆம் தேதி கூடுகிறது மக்களவை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

18ஆவது மக்களவை கூட்டத்தொடர் வரும் 24ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

18-ஆவது மக்களவை கூட்டத்தொடரின் முதல் அமர்வு, வரும்  24ஆம் தேதி தொடங்கி ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தொடரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களுக்கு பதவிப்பிரமானம், சபாநாயகர் தேர்வு மற்றும் விவாதங்கள் நடைபெறவுள்ளன. அதனைதொடர்ந்து 264வது மாநிலங்களவை கூட்டத்தொடர், வரும் 27ஆம் தேதி தொடங்கி ஜூலை 3ஆம் தேதிவரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day