ஜூலை 26ம் தேதி கார்கில் செல்கிறார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கார்கில் போர் வெற்றி தினத்தின் 25ம் ஆண்டை முன்னிட்டு, வரும் 26ம் தேதி பிரதமர் மோடி கார்கில் சென்று மரியாதை செலுத்துகிறார். கடந்த 1999ம் ஆண்டு மே மாதம் காஷ்மீரின் கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்தது. அப்போது நடைபெற்ற போரில் பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்து இந்திய ராணுவம் வெற்றி பெற்றது. கடும் பனிப் பொழிவில் நடந்த இந்த போரில் ஏராளமான ராணுவ வீரர்களும் அதிகாரிகளும் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், கார்கில் போர் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட வருகிறது. இந்த முறை கார்கில் போர் வெற்றி தினத்தின் 25ம் ஆண்டு கொண்டாடப்படுவதை ஒட்டி, ஜூலை 26ம் தேதி கார்கில் செல்லும் பிரதமர் மோடி, டிராஸ் பகுதியில் உள்ள நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்துகிறார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு அவர் இனிப்பு வழங்குகிறார். 

Night
Day