ஜெகன்மோகன் விரைந்து உடல்நலம் பெற வேண்டும் - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

விஜயவாடாவில் உள்ள சிங் நகர் தாபா கோட்லா மையத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி, தனது கட்சியின் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்மநபரின் கல்வீச்சு தாக்குதலில் ஜெகன் மோகன் ரெட்டி காயமடைந்தார். இந்நிலையில், இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் பெற பிரார்த்திப்பதாக தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.  

Night
Day