ஜெக்ரிவால் ஜாமீன் நீட்டிப்பு மனு : அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு - உச்சநீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மருத்துவ சிகிச்சைகளுக்காக கூடுதலாக 7 நாட்கள் இடைக்கால ஜாமினை நீட்டிக்க கோரி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக பட்டியலிட உச்சநீதிமன்ற பதிவாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 23ம் தேதி டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே கடந்த 10ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட வழங்கப்பட்ட இடைக்கால ஜாமின் மூலம் வெளியே வந்த அவர், தனக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டியுள்ளதால் கூடுதலாக 7 நாட்கள் இடைக்கால ஜாமீனை நீடித்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இம்மனுவை அவசர வழக்காக பட்டியலிட கோரி முறையிட்ட நிலையில் உச்சநீதிமன்ற பதிவாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

Night
Day