ஞானவாபி மசூதி இடத்தில் பெரிய இந்துக் கோவில் அமைப்பு இருக்கிறது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரபிரதேசத்தின் ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் ஒரு பெரிய இந்துக் கோவில் அமைப்பு இருப்பதாக இந்திய தொல்லியல் துறையின் சமீபத்திய அறிக்கை  தெரிவிப்பதாக இந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு ஷங்கர் ஜெயின் தெரிவித்துள்ளார். வாரணாசியில் செய்தியாளர்களிடம் ஆய்வறிக்கையைப் படித்துக் காட்டிய அவர், தொல்லியல்துறையின் அறிக்கையானது, தரையில் ஊடுருவும் ரேடார் ஆய்வையும் உள்ளடக்கியுள்ளது என்றார். இந்து கோவிலில் இருந்து சில தூண்கள் புதிய கட்டமைப்பில் பயன்படுத்துவதற்காக சிறிது மாற்றப்பட்டுள்ளதாகவும், தூண்களில் உள்ள சிற்பங்களை சிதைக்கும் முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டதாகவும் அறிக்கையில் இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், தேவநாகரி, தெலுங்கு, கன்னடம் மற்றும் பிற எழுத்துக்களில் எழுதப்பட்ட பண்டைய இந்து கோவிலுக்கு சொந்தமான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஜெயின் தெரிவித்தார்.

Night
Day