ஞானவாபி மசூதி தரப்பினரின் மேல்முறையிட்டு மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்திரப்பிரதேசத்தில் ஞானவாபி மசூதி தெற்கு பாதாள அறையில் இந்துக்கள் வழிபட தடை கோரி மசூதி தரப்பினர் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்துக்கள் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஞானவாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் இந்துக்கள் வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மசூதி நிர்வாக தரப்பினர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இரு தரப்பும் வாதங்களை நிறைவு செய்த நிலையில் இன்று தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், மசூதி தரப்பின் மனுவை தள்ளுபடி செய்தது. வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், 1993 ஆம் ஆண்டு தெற்கு பாதாள அறையில் பூஜைகள் நடத்த மாநில அரசு தடை விதித்தது சட்டவிரோதம் என கூறியுள்ளது.

Night
Day