டாமன் & டையூ மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டாமன் & டையூ மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தியை களமிறக்க ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட பாஜக வேட்பாளர் பட்டியல் கடந்த சனிக்கிழமை வெளியானது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் சோனியா காந்தி இம்முறை மாநிலங்களவை உறுப்பினராக ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் மற்ற மூத்த தலைவர்கள் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, யூனியன் பிரதேசமான டாமன் & டையூ மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராகுல் காந்தி வயநாடு மக்களவை உறுப்பினராக உள்ள நிலையில், மீண்டும் அதே தொகுதியில் அல்லது தெலங்கானாவில் இருந்து போட்டியிடலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

Night
Day