டி​ஜிட்டல் பணப்பரிமாற்ற முறைக்‍கு மாறுகிறது எய்ம்ஸ் மருத்துவமனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டிஜிட்டல் பணப்பரிமாற்றத்துக்‍கு மாறும் வகையில் நோயாளிகளுக்‍கு ஸ்மார்ட் கார்டு வசதியை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் அறிமுகப்படுத்த உள்ளது. டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் இந்த ஸ்மார்ட் கார்டு வசதியை விரைவில் அறி​முகப்படுத்தப்பட உள்ளதாகவும், வருகிற மார்ச் 31 ஆம் தேதிக்‍கு பிறகு எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் மற்றும் பரிசோதனைகளுக்‍காக நோயாளிகள் கட்டணமாக ரூபாயை நேரில் செலுத்த இயலாது என்று தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மாறாக ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே நோயாளிகள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று எய்ம்ஸ் இயக்‍குநர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

Night
Day