டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு - தாமாக முன்வந்து கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் அம்மாநில உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. பெங்களூரு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது. பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தின் பிற மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பதிலளிக்குமாறு கர்நாடக மாநில தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் வரும் 23ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

varient
Night
Day