டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியின் புதிய முதலமைச்சர் யார் என்பது குறித்து முடிவெடுக்க பாஜக தலைமையகத்தில் இன்று கூட்டம் நடைபெற உள்ளது.

அண்மையில் டெல்லி சட்டபேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்க உள்ளது. இருப்பினும் புதிய முதலமைச்சர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிரதமர் மோடியின் அமெரிக்கா பயணம் முடிவடைந்த பின்னர் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் இன்று பிற்பகல் கூடி புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய உள்ளனர்.

கூட்டத்திற்குப் பிறகு புதிய முதலமைச்சர் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் பதவியேற்பு விழா, வரும் 18ம் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெறலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Night
Day