டெல்லியில் இன்று காவி​ரி நீர் மேலாண்மை ஆணையக்‍ கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காவிரி நீர் மேலாண்மை ஆணையக்‍ கூட்டம் ​டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.

இது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 36 ஆவது கூட்டமாகும். டெல்லியில் உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்‍ கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுவை அரசு உயர் அதிகாரிகள் கலந்து ​கொள்ள உள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் இருந்து தரவேண்டிய நீர் பங்கீடு தொடர்பாக இந்தக்‍ கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. 

Night
Day