டெல்லியில் கனமழை : விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விபத்து - ஒருவர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டெல்லியில் விடிய விடிய கனமழை பெய்த நிலையில், அதிகாலை 5.30 மணியளவில் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1ன் மேற்கூரை இடிந்து விழுந்தது. விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில், கார்கள் அப்பளம் போல நொறுங்கி சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதால், டெர்மினல் 1ல் விமான சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான டெர்மினல் 1 பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

கனமழையால் விமான நிலைய மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளான டெர்மினல் 1 பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அங்கு தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், இன்டிகோ, ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது. 




Night
Day