டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்பட உத்தரப்பிரதேசத்தில் இருந்து வரும் பேருந்துகளே காரணம் - அதிஷி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்படுவதற்கு உத்தரப் பிரதேசத்தில் இருந்து வரும் பேருந்துகளே காரணம் என முதலமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் காற்று மாசுபாடு குறித்து முதலமைச்சர் அதிஷி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் ஆகியோர் ஆனந்த் விஹார் பகுதியில் இன்று ஆய்வு செய்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அதிஷி, டெல்லியில் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருவதாக கூறினார். இதற்காக 99 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், டெல்லி காற்று மாசுபாட்டிற்கு குறிப்பாக ஆனந்த்விஹார் பகுதியில் காற்றின் தரம் மோசமாக இருப்பதற்கு, அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இருந்து வரும் பேருந்துகளே காரணம் என்று குற்றம் சாட்டினார். 

Night
Day