டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் தேவையின்றி தண்ணீரை வீணாக்கினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் 120 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டி வருவதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தண்ணீர் தட்டுபாட்டை தடுக்க அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், கடும் வெப்பத்தால் டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் டெல்லிக்கு தரவேண்டிய தண்ணீரை ஹரியானா மாநிலம் தரவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் நீரை வீணடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அவர், தண்ணீரை வீணாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க 200 பேர் கொண்ட குழுவை அமைக்கவும் டெல்லி குடிநீர் வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். அதன்படி குடிநீரை பயன்படுத்தி வாகனங்களை கழுவுதல், தண்ணீர் தொட்டி நிரம்பி வெளியேறுதல், டெல்லி குடிநீர் வாரியம் வழங்கும் தண்ணீரை கட்டுமானத்திற்கு பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் நபர்களுக்கு நாளை முதல் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Night
Day