டெல்லியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அகற்ற வேண்டும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 
டெல்லியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க டெல்லி அரசு மற்றும் காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார்.

டெல்லியின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து முதலமைச்சர் ரேகா குப்தா உடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய அவர், பாரபட்சமின்றி டெல்லியில் உள்ள ரவுடிகளை ஒடுக்க வேண்டும் எனவும், சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு உதவும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். மழை நீர் தேங்கும் பகுதிகளிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளிலும் உடனடியாக தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினார்.

Night
Day