டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூருவில் கடும் குடிநீர் தட்டுபாடு நிலவி வருவதால் தமிழகத்திற்கான காவிரி நீரை திறக்க முடியாது என கர்நாடகா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.  பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்  கர்நாடகா 10 டி.எம்.சி நீரை திறந்து விட வேண்டும். ஆனால் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வழங்க வேண்டிய 5 டி.எம்சி நீரில் 1.5 டிம்சி மட்டுமே திறந்து விட்டுள்ளது. எனவே, மீதமுள்ள 3.5 டி.எம்.சி நீர் மற்றும் ஏப்ரல், மே மாதங்களுக்கான நீரை சேர்த்து வழங்க கர்நாடகாவிற்கு உத்தரவிட கோரி தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் பெங்களூருவில் குடிநீர் தட்டுபாடு நிலவி வருவதால் கூடுதல் நீரை திறக்க முடியாது என கர்நாடக பிரதிநிதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Night
Day