டெல்லியில் பல்வேறு இடங்களில் 126 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதால் அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் வரலாறு காணாத அளவிற்கு 126 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கோடை வெயில் வழக்கத்தைவிட மிகவும் மோசமான நிலையில் கொளுத்தி வருகிறது. இதில் வடமாநிலங்களான டெல்லி, பீகார், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் தினந்தோறும் 120 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் மிகவும் அவதியுற்று வரும் நிலையில், பலர் கொடிய வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாமல் உயிரிழக்கும் சூழலும் ஏற்படுகிறது.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதில் டெல்லியின் முங்கேஷ்பூர் பகுதியில் இன்று 126 டிகரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வரலாறு காணாத வெயில் பதிவாகி வருவதால் இதுவரை இல்லாத அளவிற்கு மின் தேவையும் டெல்லியில் அதிகரித்துள்ளது. மேலும் டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொளுத்தி வரும் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளை முதல் குறைய வய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Night
Day