எழுத்தின் அளவு: அ+ அ- அ
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு சம்பவம் பரபரப்பாக உள்ள நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாடியதாக வெளியான தகவல் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா வந்த அப்பாவி மக்கள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சூழலில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை மூட வேண்டும் என்று மத்திய அரசு நேற்று அறிவுறுத்தி இருந்தது. இந்தநிலையில், இந்தியர்கள் கொல்லப்பட்டதை கொண்டாடும் வகையில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்குள் கேக் வெட்டி கொண்டாட்டம் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. முன்னதாக பாகிஸ்தான் தூதரகத்திற்குள் ஊழியர் ஒருவர் கேக் எடுத்து செல்லும் காட்சி வெளியானது. மற்றவர்களின் துயரத்தை கண்டு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்வது இருண்ட இதயம் கொண்டவர்களின் வாடிக்கை என்று சமூக வலை தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.