டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேசவுள்ளார். இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகம், வரி, பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

தொடர்ந்து ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இன்று இரவு விருந்து அளிக்கிறார். இந்திய பொருட்கள் மீது அமெரிக்க விதித்த பரஸ்பரி வரியை அதிபர் டிரம்ப் 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார். இருநாடுகளும் வர்த்தக ஒப்பந்த பேச்சு நடத்தும் நிலையில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இந்தியா வந்துள்ள துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் மற்றும் அக்சர்தாம் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தவுள்ளார். 

Night
Day