டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ஈவ் டீசிங் எதிர்ப்புப் படை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் 'ஈவ்-டீசிங் எதிர்ப்பு'ப் படை தொடங்கப்படுவதாக டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. 

ஈவ்-டீசிங், பாலியல் வன்கொடுமை மற்றும் பிற வகையான துன்புறுத்தல்கள் ஆகியவற்றை இப்படை கவனிக்கும் எனத் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு ஈவ்-டீசிங் எதிர்ப்புப் படைகள் இருக்கும் என்றும் அவை, பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவின் உதவி காவல் ஆணையர் மேற்பார்வையில் செயல்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு படையிலும் ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர், நான்கு பெண் காவல் அதிகாரிகள் மற்றும் 5 ஆண் காவல் அதிகாரிகளைக் கொண்டிருக்கும் என்றும்   டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

Night
Day