டெல்லியில் மோசமடைந்துள்ள காற்றின் தரத்தால் மக்கள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதால் சுவாசப் பிரச்னை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். 

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அறுவடைக்குப் பின்னர் விவசாய நிலங்களில் மீதமுள்ள கழிவுகளை எரிப்பதால் வடமாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. மேலும் தீபாவளியை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசு புகையால் டெல்லியில் காற்று மாசு, கடந்த மாதம் 30-ம் தேதி முதல் மேலும் அதிகரித்தது. இந்நிலையில், டெல்லியில் இன்று காற்று மாசு குறியீடு 351-ஆக உள்ள நிலையில், அக்ஷர்தாம் கோயிலை சுற்றி புகைமூட்டமாக காட்சியளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 

Night
Day