டெல்லியில் விமானம் தாமதம் என அறிவித்த விமானி முகத்தில் குத்து விட்ட பயணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் விமானம் தாமதமாக புறப்படுவது பற்றிய அறிவிப்பு வெளியிட்ட விமானியை பயணி ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக டெல்லியில் விமான புறப்பாடும், தரையிறங்குவதும் தாமதம் ஆகி வருகிறது.  இந்நிலையில் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் 13 மணி நேரமாக புறப்படாமல் இருந்துள்ளது. இதனால் பயணிகள் ஆத்திரமடைந்த நிலையில் விமானம் தாமதமாவது குறித்து விமானி ஒருவர் அறிவிப்பு வெளியிட்டார். அப்போது பின் இருக்கையில் இருந்து வேகமாக ஓடி வந்த பயணி ஒருவர் விமானியின் முகத்தில் குத்து விட்டார். எனினும் பணிப்பெண் ஒருவர் குறுக்கே புகுந்த மேற்கொண்டு தாக்குதல் நடத்தாமல் தடுத்தார். விமானியை பயணி தாக்கும் வீடியோ வைரல் ஆன நிலையில், பயணி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Night
Day