டெல்லியை போல் பீகாரில் பாஜக வெற்றி பெறமுடியாது - லாலுபிரசாத்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி, பீகாரில் எதிரொலிக்காது என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.


டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு குறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி தேர்தல் முடிவால் பீகாரில் எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறினார். நாங்கள் இங்கு இருக்கும் போது பாஜக-வால் எப்படி ஆட்சி அமைக்க முடியும் என்று குறிப்பிட்ட லாலு பிரசாத் யாதவ், டெல்லி தேர்தல் முடிவின் தாக்கம் பீகார் தேர்தலில் எதிரொலிக்காது என்று கூறினார். பீகாரில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை என்றும் லாலு பிரசாத் யாதவ் உறுதிபட தெரிவித்தார்.

Night
Day