டெல்லி சட்டமன்ற தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டு மக்களின் பலத்த எதிர்பார்ப்பிற்கிடையே டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. 

டெல்லியில் மொத்தமுள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. 60 புள்ளி 42 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது. காலை 8 மணிக்குத் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. அடுத்த சில மணி நேரங்களிலேயே முன்னணி நிலவரங்கள் தெரிய வந்து விடும். இத்தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவை களம் கண்டன. மும்முனைப் போட்டி என்று கூறப்பட்டாலும், ஆம் ஆத்மி-பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவியது. ஆம் ஆத்மி ஆட்சியை தக்க வைக்குமா அல்லது 27 ஆண்டுகளுக்குப் பின் டெல்லி அரியணையை பாஜக கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. 

Night
Day