டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பெருமன்ற தேர்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் பெருமன்ற தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அபார வெற்றி பெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தலைவர், துணைத் தலைவர், செயலாளர் துணைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் ஜே.என்.யூ மாணவர் பெருமன்ற தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 4 முக்கிய பொறுப்புகளில் போட்டியிட்ட இந்திய மாணவர் சங்கம் மற்றும் இடதுசாரி அமைப்புகள் வெற்றி பெற்றது. இதையடுத்து மாணவர் தலைவராக தனஞ்ஜெய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் 1996-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர், ஜே.என்.யூ மாணவர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் போட்டியிட்ட 4 இடங்களிலும் தோல்வியை தழுவியது.

varient
Night
Day